கலைஞருக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்தார்கள்.. அதிமுக மீது மு.க ஸ்டாலின் பரபரப்பு குற்றசாட்டு.! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய விடாமல் அதிமுக அரசு தடுத்தது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

உங்கள் தொகுதியில் உங்கள் ஸ்டாலின் என்ற பெயரில் மக்களை சந்தித்து வரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், இன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் கலந்து மக்களிடையே குறைகளை கேட்டு உரையாற்றினார். 

இதன்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, " தமிழக முதல்வரின் நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடைபெற்றுள்ளது. முதல்வருக்கு தைரியம், நேர்மை இல்லை. நெடுஞ்சாலைத்துறை தொடர்பான ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு மறுத்து செயல்படுகிறார்.

பிளீச்சிங் பவுடரில் கொள்ளையடுத்தவர் தான் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர். துடைப்பத்தில் கொள்ளையடிக்கும் ஆட்சியே எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி. கலைஞருக்கு ஆறடி நிலத்தை ஒதுக்க மறுத்தது அதிமுக அரசு.

நீதிமன்றத்திற்கு சென்று வாதாடி கலைஞரின் உடலை மெரினாவில் அண்ணாவின் அருகே நல்லடக்கம் செய்தோம். தமிழகம் நயவஞ்சகம் செய்தவரின் பிடியில் உள்ளது. தமிழகத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும். 

ஊழல் செய்த ஜெயலலிதாவின் உடல் மெரினாவில் அடக்கம் செய்தபோது, கலைஞரின் உடல் மெரினாவில் அடக்கம் செய்வதில் என்ன தவறு?. தமிழகத்தின் உரிமைகளை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டு, ஊழல் செய்து அதிமுகவினர் சொத்துக்களை சேர்த்து வருகின்றனர். 

இவர்களிடம் இருந்து கோட்டையை கைப்பற்றி, தமிழகத்தின் வாழ்வுரிமையை மீட்கும் பொன்னான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. கழகம், பெரியார், அண்ணா, கலைஞர் தான் எனக்கு மாதா, பிதா, குரு, தெய்வம். இவர்களின் வழியிலேயே எனது பாதையை முன்னெடுத்துள்ளேன். ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி திமுகவின் தலைமையில் நடைபெறும் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin Speech about ADMK Govt Did not Give 6 Feet land for Funeral Karunanidhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->