எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி அறிவிப்பு.!!
mk stain on condolence on salem gas cylinder blast
சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம். தாதகாப்பட்டி கிராமம், பாண்டுரங்கன் விட்டல் தெருவில் திரு.கேோபி என்பவரது வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் அப்பகுதியிலைச் சேர்ந்த பத்மநாபன்,தேவி, கார்த்திக் ராம், எல்லம்மாள் மற்றும் ராஜலட்சுமி ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு தலா 5 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
mk stain on condolence on salem gas cylinder blast