சிறுமி பலாத்கார வழக்கு...  வாலிபருக்கு 28 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அன்பு(எ) அன்பழகனுக்கு 28½ ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபாராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 

தமிழகத்தில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சொல்லப் போனால் பள்ளி மாணவிகளுக்கு பாலியல்  தொந்தரவு ஆனது அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் சீண்டலில் ஈடுபடுத்துவது போன்ற குற்ற செயல்களும் நடந்தேறி வருகிறது. இந்தநிலையில் திருவள்ளூரில் 16 வயது சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.


திருவள்ளூர் அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர் அன்பு(எ) அன்பழகன் கடந்த 2016-ம் ஆண்டு 16 வயது சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமியின் பாட்டி திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பு(எ) அன்பழகனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி உமா மகேஸ்வரி குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அன்பு(எ) அன்பழகனுக்கு 28½ ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபாராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் அன்பழகனை புழல் சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minor girl rape case Court sentences youth to 28 years in prison


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->