பிங்க் நிற பஸ் இல்லை ஸ்டாலின் பஸ்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு.!
minister Udhayanidhistalin campaign
திருவண்ணாமலை சேத்துப்பட்டு நகர பகுதியில் வருகின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க சார்பில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ். தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அப்போது அவர் தி.மு.க அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடையே எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அவர் பேசி இருப்பதாவது, தமிழ்நாடு முழுவதும் பிங்க் நிற பேருந்து தான் அதிகமாக போகுது. அதுக்கு பேரு இப்போ பிங்க் நிற பேருந்து இல்லை பொதுமக்கள் செல்லமா ஸ்டாலின் பஸ்ஸுன்னு பேர் வச்சுட்டாங்க.
தலைவரோட பெயரை வைத்து ஸ்டாலின் பேருந்து என தெரிவிக்கிறார்கள் என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள் போது மக்கள் என்ன ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.
English Summary
minister Udhayanidhistalin campaign