மதுரையில் மாடுதான் பிடிப்பார்கள்..! செல்லூர் ராஜு புலிவாலை பிடித்துள்ளார் - அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல் - Seithipunal
Seithipunal


மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள், ஆனால் செல்லூர் ராஜு புலி வாலைபிடித்துள்ளார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் எந்தத் தொழிலும் இல்லை. இந்நிலையில் மெட்ரோ ரயில் வந்து என்ன பயன். தொழில்பேட்டை தொடங்குங்கள் ஆஹா ஓஹோ எனப் பாராட்டப்படும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து செல்லூர் ராஜுவின் கேள்விக்கு பதிலளித்த, அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே அண்ணனை பார்த்து ஆகா ஓகோ என்றுதான் பாராட்டுகிறார்கள். மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள். ஆனால், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலி வாலைபிடித்து படம் வெளியிட்டுள்ளார். புலியின் வாய் இருக்கிற பக்கம் பிடிக்காமல், வால் இருக்கிற பக்கம் பிடித்துள்ளார்

இதிலிருந்து அண்ணனின் வீரம் தெரிகிறது என்று தெரிவித்தார். அப்போது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. இதையடுத்து தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக கூறிய அவர், மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்க அமைக்கப்படும். மேலும் மதுரையில் நிச்சயமாக புதிய தொழில் பேட்டைகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Thangam Thennarasu teased that Sellur Raju has caught the tigers tail


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->