"பசங்க எவ்ளோ ஆர்வமா இருக்காங்க" - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னும் சில நாட்களில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது கொரோனா பரவல் குறைவாக இருந்தாலும், இரண்டாவது அலை பரவலாம் என்ற அச்சமும் இருக்கிறது. 

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக மாணவர்கள் வீட்டில் இருந்தே இணையம் வழியாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்களை பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பங்களை தீர்க்க பள்ளிகளை திறந்து, ஆசிரியர்கள் நேரடியாக கூறினால் மட்டுமே அவை தீரும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். 

ஒருபுறம் மாணவர்களின் எதிர்காலம், மற்றொரு புறம் அனைவரின் உயிர் என்ற இக்கட்டான சூழ்நிலையில் உலகமே ஸ்தம்பித்து இருக்கிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்று மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். பள்ளிகள் திறப்பு தொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் நாளை பாதுகாப்புடன் நடக்கும். பொதுத்தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sengottaiyan Pressmeent Erode Gopichettiyapalayam 8 November 2020


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal