அமைச்சர் சேகர்பாபுவின் மகள் காதலனுடன் ஓட்டம்.. கொலை மிரட்டலில் அமைச்சர்.. காதலன் கதறல் வீடியோ..! - Seithipunal
Seithipunal


அமைச்சர் சேகர்பாபுவின் மகள் காதலருடன் சென்று, பெற்றோரால் அவர் பிரிக்கப்பட்டுள்ளதாக காதலர் பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரவையை தன்வசம் வைத்திருப்பவர் அமைச்சர் சேகர் பாபு. இவர் சென்னையில் உள்ள துறைமுகம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், சென்னையில் உள்ள ஓட்டேரி பகுதியை சார்ந்த சதீஷ் குமார் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவில், " நான் சென்னை ஓட்டேரியில் வசித்து வருகிறேன். நானும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரின் மகள் ஜெயகல்யாணியும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்தோம். இந்த விஷயம் எங்களின் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. ஜெய கல்யாணி அமைச்சரின் மகள் என்பதால், பெண் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. 

நாங்கள் இருவரும் எங்காவது சென்றுவிடலாம் என முடிவெடுத்து, மும்பைக்கு வந்தோம். அங்கிருந்து எங்காவது செல்லலாம் என திட்டமிட்டு இரயில் டிக்கெட் முன்பதிவு செய்கையில், எங்களின் ஆதார் கார்டு தகவலை வைத்து நாங்கள் மும்பையில் இருப்பதை அறிந்துகொண்டார்கள். காவல் அதிகாரிகள் அங்கு வந்து எங்களை பிடித்தனர். பெண் நான் விருப்பப்பட்டு வந்தேன் என தெரிவித்தும், நீங்கள் சென்னை காவல் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் அளித்து செல்லுங்கள் என வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார்கள். 

அவர் தற்போது எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் எனது குடும்பத்தினரை தாக்குகிறார்கள். எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எங்களை சித்ரவதை செய்து பிரித்துள்ளார்கள். தளபதி மு.க ஸ்டாலின் எங்களை காப்பாற்ற வேண்டும். எனக்கு மிகவும் பயமாக உள்ளது " என்று தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தகவல் ஏதும் உறுதி செய்யப்படவில்லை. வீடியோவின் அடிப்படையில் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sekar Babu Daughter Jaya Kalyani Escaped with Love boy Satheesh Kumar Lover Video Goes Viral


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal