விடாது மழை... பள்ளிகளுக்கு விடுமுறை நீடிக்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!
Minister Rajmohans Statement Regarding School Holidays
மழை பாதிப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த அமைச்சர் ராஜ்மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது,
எதிர்பாராத மழை: எதிர்பாராத அளவுக்கு மழை பெய்துள்ளதாகவும், எனினும் பெரும்பாலான இடங்களில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல்வரின் கண்காணிப்பு: மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் விஜயிடம் மணிக்கு ஒருமுறை நிலவரம் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், அவரது அறிவுறுத்தலின் பேரில்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை: வானிலை மையம் தரும் தகவல்களுக்கு ஏற்பப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
English Summary
Minister Rajmohans Statement Regarding School Holidays