ஸ்டாலினிற்கு டாட்டா.. அதிமுகவில் இணையும் துரைமுருகன்?.. அமைச்சர் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் வட்டாரங்களில் கடந்த சில வருடமாகவே பல பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சி மாற்றம், கருத்து வேறுபாடு என பல விஷயங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், திராவிட முன்னேற்ற கழகத்தில் பலரும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரியவந்தது. 

ஆனால், செய்தியாளர்களை சந்தித்த கு.க. செல்வம் நான் பாரதிய ஜனதா கட்சியில் சேரவில்லை என்றும், சற்று மனவருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த விஷயம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " துரைமுருகன் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வந்தால் நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும், அதிமுக கட்சி ஆலமரம் போன்றது என்றும், அதிருப்தியில் இருக்கும் திமுகவினர் வந்தால் நிழல் கொடுக்கும் " என்றும் தெரிவித்துள்ளார். 

ஆனால், துரைமுருகன் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், கலைஞர் மீதும் அளவுகடந்த பற்றும், பாசமும் கொண்டவர் என்பதால் இதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் அ.தி.மு.க. வட்டாரங்கள் மற்றும் தி.மு.க. வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Jeyakumar Latest press meet


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal