கர்நாடக அரசால் இதை செய்யவே முடியாது... - அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்த போது முதல் மந்திரி சித்தராமையா, மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினரிடம் அனுமதி பெற்று அணை கட்டப்படும் எனவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது தெரிவித்திருப்பதாவது, மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தை கடைசியாக நடந்த கூட்டத்தில் கூட நாங்கள் எதிர்த்தோம். 

கர்நாடகா அரசு நிதியை ஒதுக்கி குழுவை அமைக்கலாம். ஆனால் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது. 

கர்நாடகா அரசு மேகதாது பற்றி பேசிக்கொண்டிருப்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. எந்த காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகா அரசு கட்ட முடியாது. அதுதான் சட்டம். அதுதான் நியதி என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister Duraimurugan speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->