நெருங்கும் பொதுத்தேர்வு - கல்வி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட அன்பில் மகேஷ்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இந்தத் தேர்வை, 25 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். 

இந்த நிலையில் இந்தத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேர்வுத்துறை சார்பில், நேற்று முன்தினம் திருச்சியில், உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பள்ளிக்கல்வி மற்றும் அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரிகள், அமைச்சர் அன்பில் மகேஷ், துறை செயலர் குமரகுருபரன் உள்ளிட்டோரும் ஆலோசனை வழங்கினர்.

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பொது தேர்வில் கடந்த ஆண்டு நடந்த முறைகேடு போன்று, இந்த ஆண்டு நடக்காமல், எந்த இடத்திலும் குழப்பம் இllamal, தேர்வை நடத்த வேண்டும்.

தேர்வில் முறைகேடுகள் இல்லாத அளவுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தேர்வுத்துறை விதிகளை தேர்வின்போது முறையாக பின்பற்ற, வேண்டும். 

புகார்கள் எழுந்தல், கண்காணிப்பாளர் மட்டுமின்றி, மையத்தை நிர்வகிக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுthது பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister anbil magesh restriction to education officers for public exam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->