மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்.! - Seithipunal
Seithipunal


தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்.!

திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- " தமிழகத்தில் எட்டு லட்சம் பேர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். அதற்கான தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. 

இந்தத் தேர்வு முடிவுகள் குறித்து மாணவ, மாணவிகள் கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கு உரிய துறைகளை தேர்வு செய்து படிக்க, "நான் முதல்வன் திட்டம்" மூலம் அறிந்து பயன்பெற வேண்டும். 

தமிழகத்தில் திராவிட மாடல் அரசு ஆட்சியை பிடித்து தற்போது இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மூன்றாவது ஆண்டில் திராவிட அரசு உறுதிமொழி ஆண்டாக கால் பதிக்கிறது. 

மாநிலம் முழுவதும் 1,222 இடங்களில் சாதனை விளக்க மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நாங்கள் அனைத்தையும் செய்து முடிக்கவில்லை. செய்ய வேண்டியது நிறைய உள்ளது" என்று அவர்தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister anbil magesh press meet in trichy for plus 2 result


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->