எம்.ஜி.ஆர். குறித்து அவதூறு பேச்சு: அதை மட்டும் செய்ய மாட்டேன்... - ஆ.ராசா திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் குறித்து ஆ. ராசா எம்.பி அவதூராக பேசியதாக தெரிவது திருப்பூர், அவினாசியில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, எம்.ஜி.ஆர் குறித்த அவதூறாக பேசிய ஆ. ராசாவை பாராளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என தெரிவித்தார். 

இந்நிலையில் கோவையில் ஆ. ராசா எம்.பி இடம் தங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஆ. ராசா, எனக்கு என்னென்ன தகுதிகள் உள்ளது என சொல்வதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு யோக்கியதை இல்லை. 

நான் அந்த வார்த்தைக்கு பதில் வேறு வார்த்தை பயன்படுத்தி இருக்கலாம் என தெரிவிக்கிறீர்கள். அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவர், முதலமைச்சரை முன்னாள் முதல்வர் கருணாநிதியை, முதலமைச்சர் குடும்பத்தினரை பற்றி பேசியது தொடர்பாக நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நிறுவையில் உள்ளது. 

அதற்குப் பின் நடந்த மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் முதலமைச்சரின் குடும்பத்தினரை கேவலப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி முதலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 

அப்படி செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். அதுவரை மன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MGR Defamation about A Raza speech issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->