மேட்டூர் அணையில் நந்தி சிலை மற்றும் கிறித்தவ ஆலய கோபுரங்கள் வெளியே தெரியும் காட்சி?! ஆச்சர்யத்தில் பொதுமக்கள்!! - Seithipunal
Seithipunal


மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அடியோடு குறைந்து விட்டது. நேற்று அணைக்கு 95 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று 107 கனஅடி தண்ணீர் வருகிறது. 

குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து விடுகிறது.

அணையின் நீர்மட்டம் நேற்று 70.02 அடியாக இருந்தது. இன்று காலை 69.96 அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 7 மாதங்களுக்கு பிறகு இன்று 70  அடிக்கு கீழ் குறைந்து உள்ளது.

கடந்த ஆண்டில் கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் 
இருந்து 2 லட்சம் கன அடிக்கு மேல் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவேரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மெட்ரிக்கு அணை 4 முறை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
 
காவேரி அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருந்துவந்தது. கடந்த ஜுலை மாதம் அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டி இருந்தது. தற்போது காவிரியில் நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறைந்துள்ளது.

அணையின் நீர் மட்டம் குறைந்து உள்ளதால், நீர்தேக்க பகுதியில் உள்ள நந்தி சிலை, கிறிஸ்தவ ஆலய கோபுரங்கள் முழுமையாக வெளியே தெரிகின்றன.

மேலும் மேட்டூர் அணையில் ஓரளவு தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு கோடைகாலத்தில் அணையை நம்பி உள்ள சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு வராது என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mettur dam


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->