'2 பசங்களுக்கு அம்மா' குளியறையில் மோசமாக சிறுவன் செய்த காரியம்.! செல்போனில் போலீஸ் கண்ட ஷாக்.! - Seithipunal
Seithipunal


மேட்டுப்பாளையத்தில் உள்ள நெல்லித்துறை அருகே 2 மகன்களை பெற்ற 38 வயது பெண்மணி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அவர் தனது வீட்டில் இருக்கும் குளியலறையில் குளிக்க சென்றுள்ளார். 

அப்பொழுது வெளியில் ஏதோ சத்தம் கேட்கிறது என்று எட்டிப் பார்த்துள்ளார். அப்பொழுது அருகில் இருந்த ஒரு வாலிபர் தெறித்து ஓடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது கணவரிடம் இது குறித்து அந்த பெண்மணி கூறியதை தொடர்ந்து, இருவரும் சென்று மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, அந்த சிறுவனை போலீசார் பிடித்து அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அந்த செல்போனை போலீசார் ஆராய்ந்த போது மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு காரணம் பல பெண்களின் வீடியோக்களை மோசமான முறையில் அந்த சிறுவன் எடுத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mettupalayam women abused by neighbor while bath 


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->