ரயில்கள் ரத்து எதிரொலி: பயணிகளுக்காக கூடுதல் பேருந்துகள்! மாநகரப் போக்குவரத்து கழகம் பிளான்! - Seithipunal
Seithipunal


புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே 150 பேருந்துகள் அதிகமாக இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெற்கு ரயில்வே சார்பில் கோடம்பாக்கம்-சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம், கிண்டி, தியாகராய நகர், சென்ட்ரல், கடற்கரைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3:15 மணி வரை 150 பேருந்துகள் அதிகமாக இயக்கப்பட உள்ளது. 

முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது,

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Metropolitan Transport Corporation 150 more buses operated


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->