சென்ட்ரல் அருகே மெட்ரோ சிக்கியது...! - இருண்ட சுரங்கத்தில் பயணிகள் திடீர் பீதி...!
Metro stuck near Central Passengers panic dark tunnel
சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் நோக்கிச் சென்ற மெட்ரோ ரெயில் இன்று காலை திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுரங்கப்பாதையின் நடுப்பகுதியில் நின்று போனது.
இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் திடீரென பதட்டத்திற்குள்ளாகி, என்ன செய்யறது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் சிக்கினர்.

சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தூரத்தில் ரெயில் சிக்கியதால், மின்விசிறிகள், ஒளி உள்ளிட்டவை சில நொடிகள் தடுமாறியதாக கூறப்படுகிறது.
சுரங்கப்பாதையில் ரெயில் நின்றுவிட்டதால் சில பயணிகள் பீதி கொண்டும், சிலர் மெட்ரோ ஊழியர்களிடம் அவசர உதவி கோரியும் இருந்தனர்.
இந்த தகவல் அறிந்து விரைவாக சம்பவ இடத்துக்கு விரைந்த தொழில்நுட்ப நிபுணர்கள் கோளாறை சரிசெய்து ரெயிலை மீண்டும் இயக்கினர்.
பின்னர் மெட்ரோ சேவைகள் வழமையான நிலைக்கு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
Metro stuck near Central Passengers panic dark tunnel