மேல்பாதி "திரௌபதி அம்மன்" கோயில் - சீல் அகற்றம்.. பெரும் பதற்றம்.!!
Melpathi draupathi Amman temple seal removed
விழுப்புரம் மாவட்டம் மேல் பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியல் என சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அக்கோவிலுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த விவகாரத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகும் சுமுக உடன்பாடு எட்டப்படாததால் அக்கோவில் நிரந்தரமாக மூடப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் மேல்பாடி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு போடப்பட்ட சிலை அகற்றி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் 9 மாதங்களுக்குப் பிறகு கோவிலுக்கு போடப்பட்ட சீலை அகற்றி நேற்று இரவு திறந்து வைத்தனர்.

மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை ஒரு கால பூஜை நடைபெறும். ஆனால் பொதுமக்கள் கோவிலில் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் மேல் பாதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Melpathi draupathi Amman temple seal removed