அண்ணாமலைக்கு என்ன தெரியும்?.. ஆவேசத்தில் வெளுத்து வாங்கிய வைகோ.! - Seithipunal
Seithipunal


நான் மகன் துரை வைகோவை அரசியலுக்கு வரக்கூறி ஊக்குவிக்கவில்லை. அவரை அரசியல் களத்தில் இறங்காமல் இருக்க உள்ள முயற்சிகள் அனைத்தையும், தந்தை என்ற தரப்பில் இருந்து முயற்சித்தேன் என வைகோ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் காவல்துறை அதிகாரிகையாக இருந்தார். அதனால் காவல்துறை அதிகாரி எண்ணத்திலேயே பேசி வருகிறார். அரசியலில் கொள்கை குறித்து அவருக்கு தெரியாது. 

குஜராத் மாநிலத்தில் இருக்கும் அதானி துறைமுகத்தில், போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த பிரமுகர்களே குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். அதனால் அவர்கள் அதுகுறித்து கருத்துக்களை சொல்ல மாட்டார்கள். 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை விஷயத்தில், இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2 வருடமாக எனது கவனத்திற்கு வராமலேயே, எனது கட்சியினர் வீடுகளில் நடைபெறும் சுப, துக்க நிகழ்வுகளுக்கு மகன் துரை வைகோவை அழைத்து சென்றுள்ளார்கள். 

அவரின் படத்தை சுவரொட்டியில் பதிவு செய்ய கூடாது எனவும் கட்சியினரிடம் கூறினேன். மதிமுக மாநாடு நடைபெறுவதற்கு முந்தய நாளில் இரவு பந்தலுக்கு சென்று, துரை வைகோவின் புகைப்படத்தை அகற்ற சொன்னேன். இனி யாரேனும் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டால் கட்சியை விட்டு நீக்கிடுவேன் என எச்சரித்தேன். 

நான் மகன் துரை வைகோவை அரசியலுக்கு வரக்கூறி ஊக்குவிக்கவில்லை. அவரை அரசியல் களத்தில் இறங்காமல் இருக்க உள்ள முயற்சிகள் அனைத்தையும், தந்தை என்ற தரப்பில் இருந்து முயற்சித்தேன். அவை அனைத்தையும் மீறி எல்லாம் நடக்கிறது. 

என்னையும் மீறியே தொண்டர்கள் அனைவரும் எங்களுக்கு வழிகாட்டி வேண்டும், அது துரை வைகோ தான் என்று கூறி அவரை அழைத்து செல்கிறார்கள், இதுவே இன்றுள்ள நிலைமை. மதிமுக என்ற கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. என்னால் உருவானது கிடையாது. தொண்டர்களின் விருப்பம் ஜனநாயக முறையில் நிறைவேற்றம் செய்யப்படும்" என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MDMK Vaiko Pressmeet Thoothukudi Vilathikulam 12 Oct 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->