அமலுக்கு வந்தது எம்.பி.சி வன்னியர் பிரிவு.. கொண்டாட்டத்தில் வன்னியர்கள்.!
MBC Reservation Vanniyar MBC V Is Applied All Education and Govt Employment in Tamilnadu
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர் சமூகத்திற்கு எம்.பி.சி பிரிவில் 20 விழுக்காடு தனி ஒதுக்கீடு வழங்க கூறி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. கடந்த அதிமுக ஆட்சியின் போது எம்.பி.சி பிரிவில் வன்னியர் என்ற உள் பிரிவு ஒதுக்கப்பட்டு, 10.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் ஆகியோர் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வழங்க உதவி செய்தனர். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், தலைவர் ஜி.கே மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் பாட்டாளி, வன்னிய சொந்தங்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் இது தொடர்பாக கோரிக்கை வைத்து, சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த முறையிடப்பட்டது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், நேற்று இரவு எம்.பி.சி வன்னியர் பிரிவு அரசு பணிகள் மற்றும் கல்வி, வேலைவாய்ப்புகளில் சேர்க்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தற்போது மேற்படிப்புகளுக்கான விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், எம்.பி.சி வன்னியர் பிரிவு இணைக்கப்பட்டது. மருத்துவர் இராமதாஸின் 42 வருட தொடர் போராட்டத்தால் வன்னியர் சமூகம் முன்னேற அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது, பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் சேர விரும்பி விண்ணப்பிக்கும் வன்னியர்கள் எம்.பி.சி வி பிரிவு மூலமாக விண்ணப்பிக்கலாம்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
MBC Reservation Vanniyar MBC V Is Applied All Education and Govt Employment in Tamilnadu