தொமுச சார்பில் மே தின விழா..நலத்திட்டம் வழங்கி கொண்டாட்டம்! - Seithipunal
Seithipunal


மாநில தொமுச சார்பில் நடைபெற்ற மே தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமை ஏற்று தொழிலாளர்களுக்கு நலத்திட்டம் வழங்கினார்.  

தொழிலாளர் தினத்தையொட்டி புதுச்சேரி மாநில திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில், தந்தை பெரியார் போக்குவரத்து கழக பணிமனை, பிஆர்டிசி பணிமனை, திருவள்ளுவர் பேருந்து நிலையம், சுதேசி பஞ்சாலை, மாஸ் ஹோட்டல், பழைய சட்டக் கல்லூரி, கதிர்காமம், புவன்கரே வீதி, வில்லியனூர், மூலகுளம், ஜேகே பெட்ரோல் பங்க், பாண்லே, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆட்டோ மற்றும் டெம்போ நலச்சங்கம், மேட்டுப்பாளையம் தேவி பாட்டில் தொழிற்சாலை, பாகூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொமுச கொடி ஏற்றுதல் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

தொமுச பேரவைத் தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை தாங்கினார். தொமுச நிர்வாகிகள் அங்காளன், ராமகிருஷ்ணன், சிவக்குமார், மிஷேல், காயாரோகணம், காந்தி, துரை, பக்தவச்சலம், சீனுவாசன், அண்ணாதுரை, ராஜேந்திரன், திருக்குமரன், விஜயபாஸ்கர், கண்ணன், ரவி, கொளஞ்சியப்பன், ராஜசேகர், ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் இமாணுவேல், ராஜேஷ், அஜிபாஷா, முருகன், சண்முகம், அம்மாவாசை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், தொமுச கெளரவத் தலைவருமான இரா. சிவா, எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, தொமுச கொடியேற்றி வைத்து தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூ. மூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஜேவிஎஸ் சரவணன், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். கோபால், வே. கார்த்திகேயன், மு. பிரபாகரன், அமுதாகுமார், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், வடிவேல், ராஜா (எ) தியாகராஜன், கலியகார்த்திகேயன், மணிகண்டன், ராதாகிருஷ்ணன், அணிகளின் அமைப்பாளர்கள் மாணவர் அணி எஸ்.பி. மணிமாறன், வழக்கறிஞர் அணி ச. பரிமளம், கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை கி. சங்கர் (எ) சிவசங்கரன், நெசவாளர் அணி ந. செந்தில்முருகன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி  ம. மதிமாறன், மருத்துவர் அணி லூ. ஆனந்த் ஆரோக்கியராஜ், சுற்றுச்சூழல் அணி த. முகிலன், மகளிர் தொண்டர் அணி சுமதி, வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரெமிஎட்வின், பொருளாளர் சசிகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

May Day celebration on behalf of TOMS Celebration of the welfare scheme


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->