மார்க் குறைந்ததால் விரக்தி: அரசு ஊழியர் எடுத்த விபரீத முடிவு!
Mark decreased leading to frustration A shocking decision made by the government employee
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே குரூப்-1 தேர்வில் கட்-ஆப் மார்க் குறைந்ததால் விரக்தி அடைந்த அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 27 வயதான இவர் மாற்றுத்திறனாளி ஆவர். ஏற்கனவே இவர் குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக திருப்புவனம் யூனியனில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்று நேர்முக தேர்வு வரை சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு கட் ஆப் மார்க் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை எனக்கூறி மனவருத்தத்தில் இருந்த நடராஜன் தற்கொலை செய்து கொண்டார்.
நடராஜனின் தந்தை ராஜேந்திரன், வெளியூரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். நடராஜனின் தாயார் நூறு நாள் வேலைக்கு சென்றுநிலையில் அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கி உள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றபோது,அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து அவரது தந்தை ராஜேந்திரன் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குரூப்-1 தேர்வில் கட்-ஆப் மார்க் குறைந்ததால் விரக்தி அடைந்த அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mark decreased leading to frustration A shocking decision made by the government employee