நாளை மறுநாள்..இந்த 2 மாவட்டங்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! 
                                    
                                    
                                   March 18 local holiday for thenkasi and thirunelveli district 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் விடுமுறை நாளுக்கு பதிலாக மார்ச் 26ம் தேதி பணி நாளாக இருக்கும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு மார்ச் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தென்காசி மாவட்டத்திற்கும் 18.03.2022 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       March 18 local holiday for thenkasi and thirunelveli district