மாவரைத்து கொடுத்த, மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டுக்கள் எவ்வளவு தெரியுமா? அடடே ஆச்சர்யக்குறி!! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தலுக்காக திண்டுக்கல் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டடார். அவர் பிரச்சார நேரத்தில் அதிகாலையிலேயே மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்போன்ற பகுதிகளில் தனது பிரச்சாரத்தை துவங்கி பல்வேறு விதமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

திண்டுக்கல் அருகே, துப்புரவுத் தொழிலாளர்களிடம் குப்பை கொட்டும் கூடையை வாங்கி குப்பைகளை அள்ளி குப்பை வண்டியில் கொட்டுவதும், 

கொடைக்கானலில் உள்ள டீக்கடை ஒன்றிக்குள் இவரே சென்று டீ ஆத்துவதும், அம்மியில் சட்னி அரைத்து கொண்டிருந்த பெண்களிடம் வலுக்கட்டாயமாக குழவியை வாங்கி சட்னி அரைத்து தருவதும்,

செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரிடம் இவரே சென்று ஷூக்களுக்கு பாலிஷ் போடுவதும், பின்னர், இளநீர் கடைகளில் சென்று அரிவாளை தானே எடுத்து இளநீர் வெட்டுவதுமாக வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.

Image result for colgate advertisement kajal

" உங்க டூத் பேஸ்டுல உப்புருக்க்கா?" என்பது போல திடீரென கிளம்பிய பூதம் போல் இவர் மக்களின் வீடுகளில், புகுந்து, வாக்கு சேகரிக்கிறேன் பேர்வழி செய்த அலப்பறைகள் ஒருபுறம் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், இவரது நடவடிக்கை காண்போருக்கு சிரிப்பை வரவழைத்தது. 

தற்பொழுது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இவர் வாங்கிய ஓட்டுக்கள் 30672 வாக்குகள் ஆகும். இதில், திமுக 411729 வாக்குகளும், பாமக 112270 வாக்குகளும் பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mansoor alikahan votes in thindukkal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->