தூங்கிக்கொண்டு இருந்த மனைவி.. உல்லாசத்திற்கு அழைத்த நபர்.. இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கவிட்ட கணவன்!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் அவ்வையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் லாரி ஓட்டுநர். மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் மணிமோகன். இவரது மனைவி செல்வி. நேற்று முன்தினம் இரவு மணிமோகன் அவரது மனைவியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த விஜயகுமார் செல்வியை எழுப்பி உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி அலறி சத்தம் போட்டுள்ளார். உஷாரான விஜயகுமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 
 நடந்தவற்றை செல்வி, மணிமோகனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமோகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊர் முழுவதும் விஜயகுமாரை தேடியுள்ளார். 

எங்கு தேடியும் விஜயகுமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் அவ்வையார் பாளையம் பகுதியில் வந்த விஜயகுமாரை கண்ட மணிமோகன் மற்றும் அவரது நண்பர்கள் விஜயகுமாரை துரத்திபிடித்து ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.

இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த விஜயகுமார் வாயில் வி‌ஷத்தை ஊற்றியுள்ளனர். பின்னர் மோட்டார் சைக்கிளால் அவரது கழுத்தில் ஏற்றியுள்ளனர். இதனால் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

விஜயகுமாரை பார்த்த மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மணிமோகன் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manimohan killed vijayakumar in erode


கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
Seithipunal