சென்னை விமான நிலையத்தில் போலி சுங்க அதிகாரி அவதாரம்: ரூ.12 லட்சம் தங்க நகை பறித்த வாலிபர் கைது!
Man Impersonating Customs Officer Arrested for Stealing 12 Lakh Gold Necklace at Chennai Airport
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த நந்தகோபால் என்பவர், கோவையிலிருந்து விமான மூலம் வந்த பெண்ணிடமிருந்து 12 சவரன் (மதிப்பு ரூ.12 லட்சம்) தங்க நெக்லஸைப் பெற்றுக்கொண்டு டெர்மினல்-1 பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தங்களைச் சுங்கத் துறை அதிகாரி எனக் கூறி மிரட்டி, நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
குற்றவாளி சரணடைவும் கைதும்
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், திருச்சியைச் சேர்ந்த சையது முஷ்ரப் (23) என்ற ரேபிட்டோ ஓட்டுநர், வழக்கறிஞருடன் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிச் சரணடைந்தார்.
குற்ற ஒப்பதல்: விமான நிலையத்தில் வாடகை கார் புரோக்கராகவும் பணியாற்றும் இவர், இருவரும் கவரில் இருந்து நகையை எடுத்துப் பார்த்தபோது பேராசையால் சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து நகையைப் பறித்துச் சென்றதாக ஒப்புக் கொண்டார்.
தான் திருடிச் சென்ற தங்க நகையைக் காவல்துறையிடம் ஒப்படைத்ததை அடுத்து, சையது முஷ்ரப்பை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
English Summary
Man Impersonating Customs Officer Arrested for Stealing 12 Lakh Gold Necklace at Chennai Airport