புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமிக்கு 30 ஆண்டுகளாக இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்..! - Seithipunal
Seithipunal


புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுவந்த இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருப்பது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. பல அரசியல் தலைவர்களுக்கு முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஸ்டாலினுக்கு 33 காவலர்கள் கொண்ட சுழற்சி முறையிலான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு, தற்போது ஒரு உதவி ஆய்வாளர் தலைமையிலான 04 காவலர்கள் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு திமுக தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திமுகவினர், இது அரசியல் பழிவாங்கும் செயல் என கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், , ''கடந்த 1996-இல் இருந்து எனக்கு 24 மணி நேர பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய அரசு வந்ததும் அந்தப் பாதுகாப்பை வாபஸ் பெறப்பட்டுள்ளது.'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Krishnasamys 30 year police protection withdrawn


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->