மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உயிரிழப்பு.. புற்றுநோயால் பறிபோன உயிர்.!  - Seithipunal
Seithipunal


மகாபலிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த 48 வயதான கீதாலட்சுமி என்பவருக்கு இரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றனர். இவர் மகாபலிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

ரத்த புற்று நோயினால் கீதா லட்சுமி பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் கடந்த திங்கள்கிழமை மாலை கீதாலட்சுமி சிகிச்சை பலனளிக்காமல் உயிரை விட்டார். 

இவரது உடலுக்கு செங்கல்பட்டு எஸ் பி, டி எஸ் பி, காவல்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று மரியாதை செய்தனர். அதன் பின் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mahabalipuram police inspector died 


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->