பிரச்சனை வந்ததும் பிரபாகரன் பெயரை இழுத்துவிட்ட பெரியார் பேரன்கள்.. நாசுக்காக திட்டமிட்டு, நாறிப்போன போராட்டம்.! - Seithipunal
Seithipunal


நவம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இந்த தினத்தை தமிழக நாளாக சிறப்பித்து, வருடம் முழுவதும் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில், தமிழகம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டு 64 வருடங்கள் ஆகிவிட்டது. 

இன்றைய தினத்தில் பலரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, தமிழகம் தனி மாநிலமாக அமைய காரணமாக இருந்த பலருக்கும் நன்றிகளை மரியாதையாக செலுத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்தில் தமிழன்னை சிலைக்கு மாலை அணிவிக்கப்போவதாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஆனால், தற்போதைய கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, முழு அனுமதி வழங்காமல் அதிகபட்சமாக 5 முதல் 10 பேர் மாலை அணிவித்து செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதில் காவல்துறையினருக்கு தெரியாமலேயே நீட் உள்ளிட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சம்பவ இடத்தில் திரண்ட 100 க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நிர்வாகிகள் சொல்வதை கேட்காமல் நாங்கள் அப்படிதான் என்பதை போல ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் விழிபிதுங்கிய அதிகாரிகள், இனி அதிரடிதான் என 100 பேரையும் குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். 

பெரியாரிய உணர்வாளர்கள் அனைவரும் காவல்துறையினர் தூக்கி செல்கையில், " நாங்கள் பெரியாரின் பேரன்கள், பிரபாகரனின் பிள்ளைகள் " என்று கூறிக்கொண்டே காவல்துறை வாகனங்களுக்குள் சென்றனர். பிரச்சனை என்று வரும் வரை தான் பெரியார் கோஷம், பிரச்சனை வந்துவிட்டால் வாசகத்தையும் மாற்றிவிட்டு பேசுவதாக அப்பகுதி மக்கள் புலம்பிவிட்டு சென்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Thamukam Ground Periyar Grandsons Protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->