மதுரை மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணி! மே மாதத்தில் அறிக்கை தயாராகும் என தகவல்.! - Seithipunal
Seithipunal


மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்தும் முறைகளுக்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வரும் சாத்தியக் கூறுகள் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி இருந்தார்.

இக்கடிதத்திற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அனுப்பட்டுள்ள பதிலில், மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சாத்தியக் கூறுகள் தொடர்பான இறுதி அறிக்கை மே மாதத்திற்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai metro train inspection


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->