நெரூரில் அங்கப்பபிரதட்சணம் செய்ய பக்தர்களுக்கு ஷாக் கொடுத்த மதுரை கிளை ஐகோர்ட்!!! 
                                    
                                    
                                   Madurai High Court gives shock to devotees performing Angappaprathaksam in Nerur
 
                                 
                               
                                
                                      
                                            கரூர் மாவட்டம்  நெரூரில் உள்ள சதாசிவம் பிரம்மேந்திரா் சுவாமி நினைவு தினத்தை முன்னிட்டு பக்தா்கள் எச்சில் இலையில் உருண்டு அங்கப்பிரதட்சிணம் செய்துவது வழக்கம் .
ஐகோர்ட் மதுரைக் கிளை தனி நீதிபதி ஜி .ஆர். சுவாமிநாதன், இதுபோன்ற நோ்த்திக் கடன் செலுத்த அனுமதி வழங்கி உத்தவிட்டு இருந்தார்.இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில், சிலரால் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை இன்று (மார்ச் 13) ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.அப்போது, எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தனர்.
இதுபோன்ற எச்சில் இலையில், உடம்பின் மீது மேலாடை போடாமல் அங்கப்பிரதட்சணம் செய்வதால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கருத்து தடை விதித்துள்ளள. இதனால் பக்தர்கள் சோகமாக உள்ளனர் .
                                     
                                 
                   
                       English Summary
                       Madurai High Court gives shock to devotees performing Angappaprathaksam in Nerur