மதுரை : தரமற்ற முறையில் உணவு தயாரிப்பு.. பிரபல பன் புரோட்டா கடைக்கு சீல்.! - Seithipunal
Seithipunal


மதுரையில் உள்ள பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மதுரை மாவட்டம் சாத்தமங்கலத்தில் பிரபல பன் புரோட்ட கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் நாள்தோறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் புரோட்டா சாப்பிடுவது வழக்கம்.

இந்த நிலையில், தற்போது, இந்த கடையில் சுகாதாரமற்ற முறையில் புரோட்டா, உணவுகள் தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று கடையில் ஆய்வு செய்தனர். 

அப்போது தரமற்ற முறையில் புரோட்டா தாயார் செய்து விற்பனை செய்ததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். மதுரையில் பிரபல புரோட்டா கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai famous bun parotta shop closed


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->