ஊட்டி, கொடைக்கானலில் வான்வழி மருத்துவ அவசர ஊர்தி சேவை எப்போது?.. மதுரை நீதிமன்றம் கேள்வி.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் மருத்துவ அவசர தேவைகளுக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 108 என்ற அவசர ஊர்தி சேவையை அறிமுகப்படுத்தினார். இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது. இன்றளவும் காப்பாற்றப்பட்டு வருகிறது. இனியும் காப்பாற்றப்படும்.

இந்நிலையில், தமிழகத்தில் போதிய அவசர ஊர்தி வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணை, இன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் வந்தது. 

இந்த விசாரணையில், " தமிழகத்தில் உள்ள ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் வான்வழி அவசர ஊர்தி சேவை உள்ளதா?. அவை எப்போது துவங்கப்படும்?. அவசர ஊர்தியில் பணியாற்றி வரும் நபர்கள், அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களை நாங்கள் பாராட்டி வருகிறோம். 

மலைப்பகுதிகளில் மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, வான்வழி அவசர ஊர்தி சேவை எப்போது துவக்கப்படும்?. அரசு அவசர ஊர்திகளில் ஜி.பி.எஸ் போன்ற கருவிகள் பொருத்தப்பட வேண்டும். அரசு அவசர ஊர்தி ஊழியர்களே, தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அரசு தரப்பு பதிலளிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கை இரண்டு வாரம் ஒத்திவைத்து உத்தரவிடுகிறோம் " என்று தெரிவித்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai Court Raise Question about Ooty and Kodaikanal Air Ambulance


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->