மதுரையில் தீ விபத்து நிகழ்ந்த விடுதி கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி முடிவு! - Seithipunal
Seithipunal


மதுரை பெரியார் நிலையம் அருகே உள்ள கட்ராபாளையத்தில் விசாகா என்ற 
பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில்   விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் பெரியார் நிலையம் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,  தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், தீ விபத்தில் சிக்கிய பெண்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. இருந்த போதிலும் தீ விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர்.  மேலும் உயிரிழந்த 2 பேரும் சரண்யா, பரிமளா என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். 

இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட போது, அடுத்தடுத்து தீ பரவி கரும்புகை எழுந்தது. இதனால், பெண்களுக்கு மூச்சு திணறல் மற்றும் சுவாச கோளாறு பாதிப்பு ஏற்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று தகவல் வெளியானது. 

தொடர்ந்து விசாகா பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, உரிய அனுமதி பெறாமல் மகளிர் விடுதி நடத்தி வந்த இன்பா என்பவரை பெண் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  மேலும் இந்த விடுதியை காலி செய்யக்கோரி கடந்த ஆண்டே மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பாக விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர்  சங்கீதா ஆய்வு மேற்கொண்டு பேசியபோது, மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களை இடிப்பதற்கு மாநகராட்சி சார்பில் முறையாக நோட்டீஸ் வழங்கியும் இடிக்காமல்  உள்ளனர். அவ்வாறு கட்டிடங்கள் ஆலோசித்து 'சீல்' வைக்கப்படும் என்று கூறினார்.  மேலும் தீ விபத்து ஏற்பட்டு 2 பெண்கள் பலியான நிலையில், விடுதி செயல்பட்டு வந்த கட்டிட உரிமையாளருக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் வழங்கி, பெண்கள் தங்கும் விடுதியை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  மதுரை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Corporation decided to demolish the hostel building where the fire occurred


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->