மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம்.!
Madurai chithirai festival
மதுரை சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது என்பதும் இத்திருக்கல்யாண நிகழ்வை பக்தர்கள் நேரில் கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. மதுரையில் உள்ள நான்கு மாசி வீதிகளான கீழமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி மற்றும் தெற்கு மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது வருகிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தை கண்டு ரசித்து வருகின்றனர். நாளை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Madurai chithirai festival