நயினாருக்கு எதிரான வழக்கு.. ECI-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! அதிர்ச்சியில் பாஜகவினர் - Seithipunal
Seithipunal


நெல்லை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்ததாக அவரது உதவியாளர்களிடமிருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

நெல்லை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ராகவன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணை முடிவில் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் நயினார் நாகேந்திரன் நெல்லைத் தொகுதியில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc order to ECI take action on nainar nagendran issue


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->