கோவில்களில் ஆடை கட்டுப்பாடு..?! பொதுமக்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
Madras high court about dressing sense For temple
வழிபாட்டுத்தலங்களில் ஆடை கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதுபற்றிய விசாரணையின்போது இந்து கோவில்களுக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்து மதத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உடையணிந்து வருகின்றனர்.
இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்தின் ஒரு சில கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமலில் இருக்கிறது. இது குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோவில்களையும் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கையை வைக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணையின் பொழுது உயர்நீதிமன்றம் இதனை ஏற்க மறுத்துள்ளது. அனைத்துக் கோவில்களிலும் இதனை கொண்டு வர முடியாது.
இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் கோவில்களில் மட்டும் விளம்பரப் பலகைகளை வைக்கலாம். கோவில்களில் ஆடை கட்டுப்பாடு பற்றிய பொது உத்தரவை பிறப்பிக்க இயலாது. இதனை கோவில் நிர்வாகங்கள் வேண்டுமானால் முறை படுத்தலாம்.
பக்தர்கள் கோவிலுக்கு முறையாக ஆடை அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது." என்று உயர்நீதி மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Madras high court about dressing sense For temple