அதிக வருமானம்... மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
Madras HC Divorce case
சென்னையைச் சேர்ந்த ஒரு டாக்டர் தம்பதிக்கு மகன் ஒருவர் உள்ளார். தம்பதியினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், கணவர் மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து டாக்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பி. பி. பாலாஜி, குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆய்வு செய்தார்.
மனுதாரர் தனது மகன் தற்போது நீட் தேர்வுக்காக தயாராகி வருவதாகவும், அவரது படிப்புக்கான செலவிற்காக 2.77 லட்சம் ரூபாய் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மனைவிக்கே போதுமான அளவில் நிலங்கள், சொத்துகள் மற்றும் சுய வருமானம் உள்ளதாகவும், அவர் ஸ்கேன் சென்டர் ஒன்றை நடத்தி வருவதாகவும் சான்றுகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை பரிசீலித்த உயர்நீதிமன்றம், மனைவிக்கு தனிநபர் வருமானம் இருப்பதால் கணவர் மாதம் 30 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்மானித்தது. இதனால், குடும்ப நல நீதிமன்றம் அளித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.