ஓட்டல் அறையில் உல்லாசம்: ஆண்களை வீழ்த்தி கோடிக்கணக்கில் பணம் பறித்த கில்லாடி இளம்பெண்! - Seithipunal
Seithipunal


திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டுக்கு செல்லாமல் கணவருடன் ஓட்டல் அறையில் தங்கி இளம்பெண் உல்லாசமாக இருந்ததை ரகசியமாக வீடியோ படம் எடுத்து ஆண்களை வீழ்த்தி கோடிக்கணக்கில் பணம் பறித்த கில்லாடி இளம்பெண் கைது செய்யபட்டார். 

ஆந்திர மாநிலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோன சீமா மாவட்டம் ராமச்சந்திர புரத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் ஒரு கும்பலை கையில் வைத்து கொண்டு,கணவன்–மனைவி பிரிவு நிலையில் உள்ள ஆண்கள், விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளவர்கள், பணக்கார இளைஞர்கள், வெளிநாட்டில் மனைவியைக் கொண்டவர்கள் உள்ளிட்டவர்களை குறிவைத்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. 

முதலில் நலம் விசாரிப்பதன் மூலம் நெருக்கத்தை ஏற்படுத்தி, பின்னர் காதலாக நடித்து ரகசியமாக திருமணம் செய்து கொள்ளும் ஆட்சி முறையில் இளம்பெண் மற்றும் அவரது குழுவினர் பணம் பறித்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு ஓட்டல்களில் தங்கி ரகசிய வீடியோ எடுத்து, அதை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் 12 பேரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பணம் இழந்தவர்கள் நேற்று ராமச்சந்திரபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், இளம்பெண் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விசாரணையில் இளம்பெண் கூறியதாவது:"எனக்கு எதிராக பொய்யான புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உண்மை தெரியவர, புகார் அளித்த 12 பேரையும் நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும். அவர்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், என் மீது பொய் புகார் அளித்ததாக புலம்புவேன்," எனக் கூறியுள்ளார்.இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Luxury in the hotel room A young woman who defeated men and stole millions of money


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->