40 கி.மீ தூரத்தில் தாழ்வு மண்டலம்...! -அடுத்த 12 மணி சென்னைக்கு டென்ஷன் நேரம்! - Seithipunal
Seithipunal


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ‘டிட்வா’ அமைப்பு, மெதுவாக சென்னையை நோக்கி நகர்ந்த வேளையில், நகர் முழுவதும் இடைவிடாத கனமழை கொட்டிக் குவிந்தது. மழை ஒரு தருணமும் ஓயாததால், முக்கிய சாலைகள் வெள்ளப்பெருக்கை ஒத்த நீரோட்டத்தில் மூழ்க, வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள்.

பல பகுதிகளில் தினசரி வாழ்க்கையே தாறுமாறாகிப் பதற்றம் நிலவியது.வளர்ச்சி திசை மாற்றம்: மையத்தின் புதிய தகவல்,சென்னை அருகே தீவிரமாக இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது பலவீனமடைந்து சாதாரண தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து 40 கி.மீ தொலைவில் மையம் கொண்டு மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நகரும் இந்த அமைப்பு, இன்னும் 12 மணி நேரம் அதன் தீவிரத்தை வைத்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும், அதன் பின்னர் கடற்கரை நோக்கி நகர்ந்து மேலும் பலவீனமடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை,இந்த தாழ்வு மண்டலத்தின் பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் இன்று கனமழை எச்சரிக்கை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


சென்னையின் நிலை நேரலையில்…நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் இடைவேளையில்லா மித-கன மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகள் பெருமளவில் நீரில் மூழ்கியுள்ளதால், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் சென்னை சராசரியாக 13.4 செ.மீ மழைபெற்றுள்ளது.
அதிகபட்ச பதிவுகள்:
பாரிமுனை – 26.5 செ.மீ
எண்ணூர் – 26.4 செ.மீ
ஐஸ் ஹவுஸ் – 23.1 செ.மீ
பேசின் பிரிட்ஜ் – 20.7 செ.மீ
மணலி புதுநகர் – 20.6 செ.மீ
வடபழனி – 18.1 செ.மீ
மேடவாக்கம் – 17.7 செ.மீ
பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், இன்று நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Low pressure area 40 km away Tension time for Chennai next 12 hours


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->