குள்ளமா இருக்க.. 7 மாத கர்ப்பிணியை கழட்டிவிட்ட காதலன் - இறுதியில் நடந்த டிவிஸ்ட்.!  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் சானாநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராசு. இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் வரம்பை மீறியதால் தனலட்சுமி கர்ப்பமாகியுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு, சின்னராசுவிடம் கூறியுள்ளார். அதற்கு சின்னராசு, தனலட்சுமி குள்ளமாக இருப்பதால் எனக்கு அவரை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று கூறி, திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

சின்னராசுவின் இந்த முடிவால் மன வேதனையில் இருந்த தனலட்சுமியின் குடும்பத்தினர், சம்பவம் குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் படி, போலீசார் சின்னராசுவை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஒத்து வந்த நிலையில், மாப்பிள்ளை மட்டும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அடம் பிடித்துள்ளார். இதனால், அச்சமடைந்த தனலட்சுமி குடும்பத்தினர், போலீசாரின் முன்னிலையிலேயே திருமணம் நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

அதன் படி, திருவண்ணாமலை, பெரியார் சிலை அருகில் உள்ள கெங்கை அம்மன் கோவில் விநாயகர் சன்னதி முன்பாக, இரு வீட்டார் முன்னிலையில் சின்ராசுவிற்கும் தனலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

lover stop marriage for girl low hight in tiruvannamalai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->