#தமிழகம் || டீ கடைக்குள் புகுந்த மணல் லாரி.! அடுத்து அரங்கேறிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று, டீ கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்து உள்ளார்.

நாகப்பட்டினம்-வேதாரண்யம் தேசிய நெடுஞ்சாலை புதுக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் உணவகம் மற்றும் டீக்கடையில், கொள்ளிடத்தில் இருந்து ஆற்று மணல் ஏற்றி வந்து கொண்டிருந்த லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

அப்போது கடையில் டீ மற்றும் உணவு அருந்திக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் விழுந்து அடித்து ஓடினர்.

இதில் அந்த டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த ஓய்வுபெற்ற வேளாண் துறை அலுவலர் சிவசண்முகம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து வெளியான முதல் கட்ட தகவலின்படி, இடது புறமாக சென்று கொண்டிருந்த லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வலது புறத்தில் இருந்த டீக்கடை, உணவகத்தில் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் முழுதுமாக சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lorry accident puthukadai nagai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->