லிக்விட் நைட்ரஜன் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


லிக்விட் நைட்ரஜன் உணவுப் பொருட்களில் கலக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.சமீபத்தில் கேரளாவில் நைட்ரஜன் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம் சமூகவலைத்தளங்கில் காட்டுத்தீபோல் பரவியது.

லிக்விட் நைட்ரஜன் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்க வேண்டி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!

சமீப காலங்களில் திருமண நிகழ்ச்சி, பார்ட்டி, கண்காட்சி போன்றவற்றில் சிறுவர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்த லிக்விட் நைட்ரஜன் போடப்பட்ட உணவுகள் கொடுக்கப்படுகின்றன.

குறிப்பாக பீடா, பிஸ்கட் ஆகியவற்றில் லிக்விட் நைட்ரஜனில் கலந்து கொடுக்கிறார்கள். இது மிக மிக ஆபத்தானது. லிக்விட் நைட்ரஜன் (Liquid Nitrogen) துளிகள் சருமத்தில் பட்டால் கடும் எரிச்சலை ஏற்படுத்தும். கண்களில் இதன் துளிகள் பட்டால் கண்கள் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவது மட்டுமின்றி, கண்களில் கார்னியா பகுதியை முழுவதுமாக பாதித்து கண் பார்வை பறிபோகும் அளவுக்கு ஆபத்தானது.

லிக்விட் நைட்ரஜன் (Liquid Nitrogen) நாக்கில் பட்டால் நாக்கே வெந்து போகும். சுவாசப் பாதையில் பட்டால் மெல்லிய திசுக்களை அழித்து விடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உயிரையே பறிக்கலாம். இரைப்பைக்குள் நுழையும் போது குடல் வெந்து, இறப்பு வரை போகும் அபாயம் உண்டு. எனவே குழந்தைகள் இந்த லிக்விட் நைட்ரஜன் கலக்கப்பட்ட உணவுகளை பயன்படுத்தாதவாறு பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் வேறு எங்கும் பயன்படுத்தாத வாறு குறிப்பாக கோடைகால விடுமுறையில் இருக்கும், மாணவ, மாணவிகள்  விளையாட்டாக இதைப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. தமிழக அரசு உடனடியாக இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Liquid nitrogen adulteration of food products pramalatha vijayakanth


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->