எனது கணவனை விட்டுவிடுங்கள்.. கள்ளக்காதலியிடம் கெஞ்சிய மனைவி! - Seithipunal
Seithipunal


கோவையில் தனது கணவனை விட்டுவிடுங்கள் என கள்ளக்காதலியிடம்  மனைவி கெஞ்சிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் பிரபல கார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் வேறொரு பெண்ணுடன் பழகினார்.

அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதுடன் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரின் பழக்கம் ஊழியரின் மனைவிக்கு தெரியவர  மனைவி, தனது கணவனிடம் இந்த பழக்கம் வேண்டாம் பஅவமானமாக போய்விடும் என பேசியுள்ளார்.ஆனால்  பயனில்லாமல் போனது. இந்தநிலையில்  கணவனின் கள்ளக்காதலியான அந்த பெண்ணை செல்போனில் அழைத்து உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறி அவளை அந்த பெண் அளித்துள்ளார்.

அப்போது இருவரும்  கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் சந்தித்து பேசியுள்ளனர் . அப்போது அவள்.... ஆம்..கணவனின் மனைவிதான், எங்களுக்கு குழந்தைகள் உள்ளனர். எங்கள் குடும்பத்தினருக்கு தெரிந்தால் அவமானமாக போய்விடும். அதனால் எனது கணவனைவிட்டு விலகி சென்று விடுங்கள் என்று அந்தபெண்ணிடம் கெஞ்சினார். இதையடுத்து  கள்ளக்காதலி அங்கிருந்து சென்றாள்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியே சென்ற கணவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடிப்பார்த்தாள் பலனில்லை. இதனால் தனது கணவர் கள்ளக்காதலியுடன் சென்று இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Leave my husband a wife pleading with a mistress


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->