மறைந்த விஜயகாந்த்: பொதுவிடத்தில் நல்லடக்கம் செய்ய கோரிய பிரேமலதா! - Seithipunal
Seithipunal


தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்து விட்டார். இவரது உடல் பொதுவிடத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜயகாந்த் உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு தமிழக முதல்வர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 

அப்போது விஜயகாந்த் மனைவியும் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக முதல்வரிடம், மறைந்த விஜயகாந்த் உடல் பொதுவிடத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக விஜயகாந்த்க்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது. 

இந்த செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே விஜயகாந்த் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. 

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்திற்கு முன்பு வைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Late Vijayakanth Premalatha requested buried in public


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->