மாணவர்களே மறந்துடாதீங்க.. கல்லூரியில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தாமதமானதால் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க கூடாது என யு.ஜி.சி. உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான காலவகாசம் நீட்டிக்கப்பட்டது.

 இதற்கிடையில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் கடந்த 22-ந்தேதி வெளியானது.  
சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று (ஜூலை 27-ந் தேதி) வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதேபோல் 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் நேற்று வரை விண்ணப்பித்து உள்ளனர்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாட்களாக என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வந்த நிலையில் இன்று மாலையுடன் காலவகாசம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Last day apply for college


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->