கும்பகோணம் மாவட்டம்! எம்பி வைத்திலிங்கத்தை சந்தித்த போராட்டக்குழு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பெரிய மாவட்டங்கள் எல்லாம் இரண்டாக, மூன்றாக பிரிக்கப்பட்டு, 32 மாவட்டங்கள் என இருந்தது 38 மாவட்டங்கள் ஆனது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது தஞ்சாவூர் மாவட்டமும் இரண்டாக பிரிக்கப்பட்டு, கும்பகோணம் மாவட்டம் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி போராட்டகுழு அமைத்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இதன் ஒருகட்டமாக இன்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்தை பார்த்து போராட்டகுழுவினர் மனு அளித்தனர். 

மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தை சந்தித்து, பாமக, பாஜக, இந்திய தேசிய காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி , இந்து மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, விடுதலை தமிழ்புலிகள் கட்சி, கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு, குடந்தை வணிகர் சங்கம் உள்பட அனைத்து இயக்கங்களும் இணைந்து போராட்டகுழு வின் ஒருங்கிணைப்பாளரும், வன்னியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான ம.க.ஸ்டாலின் தலைமையில், கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் கோரிக்கை மனு மற்றும் 20ந்தேதி நடைபெறும் மக்கள்திரள் போராட்ட துண்டறிக்கையும் வழங்கினார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kumbakonam District


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal