கர்த்தர் எப்படி இறந்தாரோ.... கே.எஸ்.அழகிரி கண்ணீர் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் ஆனது, பல தரப்பிலிருந்தும் காவல்துறைக்கு கண்டனங்களை பெற்று வருகிறது. தந்தை, மகனின் மரணத்திற்கு பல தரப்பில் இருந்து நீதி கேட்டு போராட்டங்கள் மற்றும் கண்டனங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடுத்தடுத்து வலுத்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஜெயராஜின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், 

" கர்த்தர் சிலுவையில் அடைபட்ட போது எப்படி இறந்தாரா? அப்படிதான் தான் எனது கணவர் இறந்துள்ளார். அவர்களுக்குள் என்ன பிரச்சனை? எதற்காக கொலை நடந்தது ? என்று தெரியவில்லை என்று அவரது மனைவி கண்ணீருடன் கூறினார். மேலும், அவர்களின் ஆடைகள் முழுவதிலும் இரத்தமாக இருந்ததாக கூறினார். 

ஆக எதற்காக இந்த கொலை நடந்துள்ளது?. இந்த விஷயம் தொடர்பான விசாரணை செய்து, தகுந்த நீதி வழங்கி, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக காவல்துறை மிகவும் கண்ணியம் மிக்க, சிறப்பான காவல் துறை. காவல்துறையில் இருக்கும் கருப்பு ஆடுகளை காவல்துறை கண்டறிந்து நீக்க வேண்டும் " என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KS Alagiri Press meet about Sathankulam Murder


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->