மனைவியை படுக்க அழைத்த அண்ணன்! கோவத்தில் அடித்து கொன்று கிணற்றில் வீசிய தம்பி கைது! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் மனைவியை தகாத உறவுக்கு அழைத்த அண்ணனை கொன்று கிணற்றில் வீசிய தம்பி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சாலிகொக்கரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன்கள் பாபு மற்றும் மூர்த்தி. மூர்த்தி என்பவர் அதே பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். பாபு என்பவர் கோவையில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

பாபு திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவர் கோவையில் இருந்து அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து தம்பி மனைவியான மஞ்சுளாவிடம்  தகாத உறவுக்கு அழைத்துவிட்டு செல்வதாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக பாபு இதனை தொடர்ந்து செய்து வந்ததாக அவரது தம்பி மூர்த்திக்கு தெரிய வந்துள்ளது.  இதுகுறித்து மஞ்சுளாவிடம்  மூர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மஞ்சுளா கோபித்துக் கொண்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் போதையில் வீட்டிற்கு வந்த பாபு தம்பியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். இதனால் ஆதிரம் அடைந்த மூர்த்தி  அருகில் இருந்த கட்டையால் சரமாரியாக தாக்கி பாபுவை கொலை செய்துள்ளார். பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் இருந்த சாக்கு பையில் கட்டி வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் வீசி உள்ளார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அப்பகுதியினர் கிணற்றில் சாக்கு முட்டையின் மிதப்பதாகவும் அழகிய நிலையில் துர்நாற்றம் வீசுவதாகவும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெரில் அங்கு விரைந்த  போலீசார் கிணற்றில் இருந்து சாக்கு முட்டையை எடுத்து பார்த்தபோது  அதில் பாபு  இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணையில் மூர்த்தி பாபுவைகளை செய்து ஒப்புக்கொண்டதை எடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  சேலம் சிலையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri the brother who killed the brother who invited his wife to have an inappropriate relationship and threw him into a well was arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->