தமிழகத்தில் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி; அரசு மீது மக்கள் பேரன்பு கொண்டிருக்கிறார்கள்; அமைச்சர் ஷாஜகான்..! - Seithipunal
Seithipunal


பாபநாசம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் பல்வேறு பணிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர், அம்மாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி சரியில்லாத ஒரு ஆட்சியாக இருந்தது எண்டுறம், தற்போது தவெக தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை செலுத்த திட்டமிட்டு இருக்கிறதாகவும், ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த வேண்டும் என மிகத் தெளிவாக அறிவித்து இடைத்தேர்தலை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் சார்பில் மதுராந்தகத்தில் போட்டியிடக் கூடிய மரகதம் குமரவேல், தாராபுரத்தில் போட்டியிடுகின்ற சத்தியபாமா ஆகியோரை ஆதரித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் குழுக்கள் அமைத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறதாகவும் கூறியுள்ளார்.

மேலும், கடந்த 03 நாட்களுக்கு முன்பு 02 தொகுதிகளிலும் பிரச்சாரத்திற்காக சென்று வந்த நான் பொதுமக்களை சந்திக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று தெரிவித்ததோடு, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி என்ற நம்பிக்கையில் மக்கள், அரசு மீது பேரன்பு கொண்டிருக்கிறார்கள் என்றும்,  அதனால் இடைத்தேர்தலில் தவெகவின் 02 வேட்பாளர்களும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெறுவார்கள் என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Shahjahan states that a corruption free administration is in place in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->